Kamal Photoshoot – கமல் ஹாசனின் புதிய போட்டோஷூட்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கமல் ஹாசன் தொடங்கியிருக்கும் ‘ஹவுஸ் ஆப் கதர்’ காதி பிராண்டிற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கமல் ஹாசன் இந்திய சினிமாவின் அடையாளமாக இருப்பவர். தொடர்ந்து நடித்துவந்த அவர் சில வருடங்களுக்கு முன்னர் சினிமாவிலிருந்து ஒதுங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். சினிமாவில் வென்றது போல் அரசியலிலும் பெரிய ரவுண்டு வரலாம் என்ற கமல் ஹாசனின் கணக்கு பொய்த்துப்போனது. இருப்பினும் அரசியல் சம்பந்தமாக அவ்வப்போது கருத்துக்களை கூறிவரும் அவர், கட்சி தொடர்பான கூட்டத்தையும் நடத்திவருகிறார்.

கமலின் ரீ என் ட்ரி: சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் நடித்து ரீ என் ட்ரி கொடுத்தார். கமல் ஹாசனின் அட்டகாசமான நடிப்பு, லோகேஷ் கனகராஜின் அசத்தலான மேக்கிங் என படம் அருமையாக இருந்ததால் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 500 கோடி ரூபாய் அளவு வசூலித்தது. விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார்.

இந்தியன் 2: அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது. அதனையடுத்து பல முயற்சிகளுக்கு பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் சண்டை காட்சி ஒன்று தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட ஷூட்டிங் அதாவது க்ளைமேக்ச் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருவதாக கூறப்படுகிறது.

Kamal Haasans recent photoshoot for Khadi brand House of Khadar has trended on the internet

அசத்திய அனிருத்: படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்திலேயே கமல் ஹாசனுக்கு மாஸான இசையை கொடுத்த அனிருத் இந்திய 2 படத்திலும் அதனை தொடர்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். சமீபத்தில்கூட இயக்குநர் ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கேரவன் ஒன்றில் இந்தியன் 2 இசையை அனிருத் உருவாக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.

கமலின் புதிய தொழில்: இதற்கிடையே கதர் ஆடைகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் நோக்கத்தில் ஹவுஸ் ஆப் கதர் என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை தொடங்கினார் கமல் ஹாசன். இதற்கான லோகோவை பிக்பாஸ் சீசன் 4ன் இறுதி நாளன்று அவர் வெளியிட்டார். இந்தத் தொழிலில் டிசைனர் அமிர்தா ராமும் கைகோர்த்திருக்கிறார். கதர் ஆடை என்றாலே வயதானவர்கள்தான் அணிய வேண்டும் என்ற பிம்பத்தை இதன் மூலம் உடைக்க கமல் ஹாசன் திட்டமிட்டிருக்கிறார்.

Kamal Haasans recent photoshoot for Khadi brand House of Khadar has trended on the internet

ட்ரெண்டான போட்டோஷூட்: இந்த ஹவுஸ் ஆப் கதருக்காக சில வருடங்களுக்கு முன்னர் கமல் ஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. இந்நிலையில் ஹவுஸ் ஆப் கதர் பிராண்டிற்காக புதிய போட்டோஷூட்டை கமல் ஹாசன் நடத்தியிருக்கிறார். பாலை வனத்தில் இரண்டு பெண்களுடன் படு கேஷுவலாக இருக்கும் அப்புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது சமூக வலைதளங்களில் இணையத்தீயாக பரவிவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.