வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மல்யுத்த சம்மேள தலைவர் பதவி விலக கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது, மல்யுத்த வீராங்கனையர் ஏழு பேர் பாலியல் புகார் தெரிவித்தனர். பிரிஜ் பூஷண் சிங்கை பதவி நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் புதுடில்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை துவக்கினர். இதையடுத்து அவர் மீது புதுடில்லி போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் டில்லி போலீசார் தொடர் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை, மாறாக தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் நடத்தி வரும் தொடர் போராட்டம், இன்றுடன் 30 நாட்கள் முடிவுற்ற நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மெழுவர்த்தி ஏந்தி தங்களின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தினர்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கூறுகையில், வரும் 28-ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடைபெறுகிறது. புதிய பார்லி. கட்டடம் முன் எங்கள் போராட்டக்குழுவைச் சேரந்த மகளிர் பிரிவினர் அமைதியான முறையில் மஹா பஞ்சாயத்து கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement