திருச்சி: நதியாவை காணவில்லையாம்.. அவரது கணவர் எங்கெங்கோ அவரை தேடிக் கொண்டிருக்கிறார்.. போலீசாரும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. என்ன காரணம்?
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ளது கோம்பைபுதூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி பெயர் நதியா.
நர்சிங் கோர்ஸ்: இவர் நர்சிங் படித்துக்கொண்டிருந்தபோது கிருஷ்ணனை காதலித்துள்ளார்.. கிருஷ்ணனும் நதியாவை காதலித்து வந்துள்ளார்.. இந்த நிலையில் 2 பேருமே கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இருவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்நிலையில், துறையூர் அருகே அரசு பள்ளியில் நதியாவுக்கு டீச்சராக வேலை கிடைத்தது.. ஆனால், அது தற்காலிக ஆசிரியை பணிதான் என்றாலும், தொடர்ந்து இந்த பள்ளியில் வேலை பார்த்து வந்தார்.. ஆனால் வீட்டில் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடந்திருக்கிறார்.. வீட்டைகூட சரியாக கவனிக்காமல் எப்ப பார்த்தாலும் செல்போனில் நேரத்தை செலவிடுவதால், கணவனுக்கு ஆத்திரம் வந்துள்ளது..
ஜாலி ஜாலி: இதுவே தம்பதிக்குள் தகராறாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால், நதியா, சோஷியல் மீடியாவிலேயே பெரும்பாலான நேரத்தை கழித்து வந்ததாக கூறப்படுகிறது… அப்படித்தான், இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. அந்த இளைஞர் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்.. அவர் பெயர் நவீன்.. இந்த நட்பானது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.. இருவருமே செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.. நேரம் கிடைக்கும்போதெல்லாம், நேரிலும் சந்தித்து, ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இதனால், கணவன் மீது நதியாவுக்கு வெறுப்பு வந்துவிட்டது.. தேவையில்லாமல் கணவனுடன் சண்டை போடுவது, எரிச்சலில் திட்டுவதுமாக இருந்தார்.. இளைஞர் மீதான காதல் காதல் அதிகரிக்க, அதிகரிக்க, கணவனை ஒருபொருட்டாககூட மதிக்காமல் போனார் நதியா..
நதியா எங்கே: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் ஸ்கூலுக்கு போன நதியா, மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. இரவு நேரமாகியும் வீட்டுக்கு வராததால், பதறிப்போன கணவர், எங்கெங்கோ தேடி பார்த்தார்.. நதியாவின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான், கணவனின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.. அதை நதியா அனுப்பியிருந்தார். அதில், “நான் பிரகாஷ்கூடவே போறேன்.. என்னை இனிமேல் தேட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன், அதற்கு பிறகு வேறு வழியில்லாமல் துறையூர் போலீசுக்கு ஓடினார்.. மனைவியை காணவில்லை என்று புகார் தந்ததையடுத்து, நதியா அனுப்பிய செல்போன் மெசேஜையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.. நதியாவின் செல்போன் நம்பரை வைத்து அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.