கும்பகோணம்: சுவாமிமலையிருந்து கும்பகோணம் வழியாகச் சென்னைக்கு செல்லும் பேருந்து இயக்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்.
சுவாமிமலையிலிருந்து கும்பகோணம் வழியாகச் சென்னைக்கு பேருந்து இயங்கி வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்று காரணத்தினால் பேருந்து நிறுத்தப்பட்டது. இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் எனச் சுவாமிமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்,
இதைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் பேருந்தை இயக்க முடிவு செய்யப்பட்டு, கும்பகோணம் வட்டம், சுவாமிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், அப்பேருந்தின் இயக்கத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதில், பாபநாசம் எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா, அரசுப் போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெ.ஜெபராஜ் நவமணி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் எஸ்.கே.முத்துசெல்வம், சுவாமிமலை பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.வைஜெயந்தி சிவக்குமார், உதவி மேலாளர்கள் திரு.எஸ்.செந்தில்குமார், ஏ.தமிழ்செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இப்பேருந்து தினமும் இரவு 10.10 மணிக்கு சுவாமிமலையிலருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்குச் சென்னை சென்றடையும். சென்னையிலிருந்து தினமும் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு கும்பகோணம் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.