அரசு டாஸ்மாக் பாரில் இருவர் உயிரிழந்தது மற்றும் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
அதன்படி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 75 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷியாம் கிருஷ்னசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “இது போன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சட்டவிரோத பார்கள் செயல்பட்டு வருகிறது.
சட்டவிரோத பார்களை அரசே மூட புதிய தமிழகம் கட்சி விதித்த கெடு – ஜூன் 15. இல்லையென்றால் புதிய தமிழகம் பானியில் மூடப்படும் என்ற எச்சரிக்கப்பட்டது!
மூடி பாருங்க என்று கமென்டுகளில் வாய் சவடால் விட்ட திமுக அட்டை கத்திகளுக்கு பதில். “மூடாம் இருந்து பாருங்கடா”…
ஆயத்தீர்வை (excise duty) இல்லாமல், இந்த பார்களுக்கு நேரடியாக திமுகவினர் நடத்தும் மது ஆலைகளிலிருந்து தரமில்லாத மதுபானங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சயனைடு கலந்திருக்க கூட வாய்ப்பு உண்டாம்” என்று ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பார்களை அரசே மூட புதிய தமிழகம் கட்சி விதித்த கெடு – ஜூன் 15!
இல்லையென்றால் புதிய தமிழகம் பானியில் மூடப்படும் என்ற எச்சரிக்கப்பட்டது!
மூடி பாருங்க என்று கமென்டுகளில் வாய் சவடால் விட்ட திமுக அட்டை கத்திகளுக்கு பதில்,
மூடாம் இருந்து பாருங்கடா… pic.twitter.com/aeBbCBYXCk
— Shyam Krishnasamy (@DrShyamKK) May 23, 2023