போதையில் அரசு பேருந்தை இயக்க முயற்சித்த ஆசாமிக்கு அடி – உதை… ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு..!

திருத்தணி பேருந்து நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தில் பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், பேருந்தை இயக்க முயற்சித்த போதை ஆசாமிக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

திருவள்ளூருக்கு செல்லவிருந்த அரசு பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும், நேர காப்பளார் அலுவலகத்திற்கு சென்று வருவதற்குள், பேருந்தில் ஏறிய போதை ஆசாமி, பேருந்தை இயக்க முயற்சித்துள்ளார்.

இதில் சில அடி தூரம் நகர்ந்த பேருந்து, எதிரே வந்த மற்றோரு அரசு பேருந்தின் மீது மோதவிருந்த நிலையில், அங்கு வந்த ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு கைகளால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

தரையில் படுத்து உருண்டு அலப்பறை செய்த போதை ஆசாமி, சற்று நேரத்தில் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.