ட்ரைவிங் லைசென்ஸ் பிரச்சினையா? RTO சேவைகளில் வந்த டிஜிட்டல் மாற்றம்… இனிமே ரொம்ப ஈஸி!

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மாநில அரசுகளால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (Regional Transport Office – RTO) நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை TN01 (மத்திய சென்னை) தொடங்கி TN99 (கோவை மேற்கு) வரை மண்டல வாரியாக 89 அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவெண் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலங்கள் மூலம் பெறலாம்.

ஆப்சன்ட் முறையை கைவிடக்கோரி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆர்.டி.ஓ அலுவலக சேவைகள்

இவற்றில் திருத்தம், சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று தான் விண்ணப்பித்து பெற முடியும். இந்நிலையில் ஆர்.டி.ஓ அலுவலக சேவைகளை டிஜிட்டல் முறையில் மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 42 வெவ்வேறு விதமான சேவைகளை இனி ஆன்லைனில் பெறலாம். இதனால் நேரடியாக செல்ல வேண்டிய தேவை எழாது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தாலே போதும் எனக் கூறுகின்றனர். உதாரணமாக,

ஓட்டுநர் உரிமத்தில் பெயர் அல்லது முகவரி மாற்றம் செய்தல்வாகனப் பதிவெண் சான்றிதழில் திருத்தம் செய்தல்டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம், LLR, பெர்மிட் வாங்குதல்மோட்டார் வாகனங்களுக்கு தற்காலிக பதிவு பெறுதல்வாகனப் பதிவிற்கு தடையில்லா சான்று (No Objection Certificate) பெறுதல்மொபைல் எண்ணை அப்டேட் செய்தல்ஒரு மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் இருந்து வேறொரு மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு வாகனப் பதிவை மாற்றம் செய்தல்

பரிவாஹன் இணையதளம்

இத்தகைய டிஜிட்டல் சேவையில் பெறுவதற்கு https://parivahan.gov.in/parivahan/ என்ற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் சென்று உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் ஆணை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

லஞ்சத்திற்கு குட்பை

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்தில் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், டிஜிட்டல் சேவையால் புரோக்கர்கள், ஏஜெண்ட்களின் தலையீடுகள் குறையும். மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் வராது. மேலும் அரசின் இ-சேவை மையங்களுக்கு சென்றால் எளிமையான முறையில் விரைவாக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தனர்.

வாகனப் பதிவெண் நடைமுறை

மேலும் சிலர் கூறுகையில், வாகனப் பதிவு நடவடிக்கையானது அதை வாங்கும் டீலர்களிடமே பெறும் நடைமுறை தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. இது மற்ற மாநிலங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு பலரும் பயனடைந்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் வாகனப் பதிவெண் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட வாகனத்தை ஆர்.டி.ஓ தரப்பிடம் காண்பிக்க வேண்டியுள்ளது.

இந்த விஷயத்தில் மாற்றம் செய்து டீலர்களே வாகனப் பதிவெண் வழங்கும் வசதி வந்துவிட்டால் இன்னும் எளிமையாகி விடும் என்கின்றனர். இதில் அரசு தரப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.