Lady Chatterley's Lover Review: எந்த மர்ம பாகத்தையும் மறைக்கல.. லேடி சட்டர்லி லவ்வர் எப்படி இருக்கு?

Rating:
3.5/5

நடிகர்கள்: எம்மா கொரின். ஜேக் ஓ கானெல்

இசை: இசபெல்லா சம்மர்ஸ்

இயக்கம்: லாரே டி கிளெர்மண்ட் டானரி

நேரம்: 2 மணி நேரம் 7 நிமிடங்கள்

ஓடிடி: நெட்பிளிக்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ஹாட் எரோடிகா காதல் திரைப்படம் தான் லேடி சட்டர்லி லவ்வர்.

முதல் உலகப்போரில் கலந்து கொண்ட சர் க்ளிஃபோர்ட் சட்டர்லியின் மனைவிக்கும் இன்னொருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் தான் இந்த படத்தின் கதை.

எந்தவொரு சென்சாரும் இல்லாமல் full frontal nudity-ஐ காதலுடன் காட்டியுள்ள அந்த மழையில் ஆட்டம் போடும் காட்சிக்காகவே இந்த படத்தை நெட்பிளிக்ஸில் ஏகப்பட்ட இளைஞர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். பிரபல நாவலாசிரியர் டி.எச். லாரன்ஸ் எழுதிய புகழ்மிக்க நாவலை மையமாக வைத்து இந்த காதல் காவியம் உருவக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

லேடி சட்டர்லி லவ்வர் கதை: சர் க்ளிஃபோர்ட் சட்டர்லி கான்ஸ்டன்ஸ் கானி ரெய்டு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு தனது மாளிகைக்கு அழைத்து வருகிறார். திருமணம் ஆன சில நாட்களிலேயே முதல் உலகப் போர் அறிவிக்கப்பட அந்த போரில் சட்டர்லி கலந்து கொள்கிறார்.

போர் முடிந்து திரும்பி வரும் போது அவரது இடுப்புக்கு கீழ் எதுவுமே செயல்படாத நிலையில், பக்கவாதத்தால் முடங்குகிறார். போருக்கு சென்று திரும்பி வந்த புருஷன் உடன் உறவு வைக்க விரும்பும் லேடி சட்டர்லிக்கு அவரது ஆசை நிறைவேறவில்லை.

Lady Chatterleys Lover Review in Tamil

தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்றும் நீ யாருடனாவது உறவு வைத்துக் கொண்டு பிள்ளையை பெற்றுக் கொண்டு என் மகனாக வளர்க்க வேண்டும் என்கிறார்.

போருக்கு சென்று விட்டு வந்த நிலையில், ஆலிவர் மெல்லார்ஸ் எனும் சாதாரண படை வீரனின் மனைவி அவரை விட்டு ஓடி விட்டதை அறிந்து வருத்தப்படுகிறார். இந்நிலையில், இந்த இருவரும் சந்தித்து காதல் வயப்படுவதும் கடைசியில் என்ன ஆனது என்பதும் தான் இந்த படத்தின் கதை.

காதல் கொஞ்சம் காமம் தூக்கல்: அப்பவே இந்த நாவலை சரியான பிட்டு படம் போலத்தான் டி.எச். லாரன்ஸ் எழுதி உள்ளார். நெட்பிளிக்ஸுக்கு இப்படியொரு கதை கிடைக்க சும்மா விடுவார்களா? நிர்வாணக் காட்சிகள், உடலுறவு காட்சிகள் என காதலை கொஞ்சமாக காட்டி காமத்தை ஒட்டுமொத்தமாக காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் லேடி சட்டர்லி பக்கத்து தோட்டத்தில் பூப்பறிக்க செல்லும் போது ஆலிவர் மெல்லார்ஸ் நிர்வாணமாக குளிப்பதை பார்த்து அவர் மீது இச்சை கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடன் பழக ஆரம்பித்த உடனே, அவருடன் படுக்கையை பகிர அதன் பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலான காட்சிகளில் வெறும் காமம் தொடர்பான காட்சிகள் தான் எல்லை மீறி திரையை ஆக்கிரமித்துள்ளன.

Lady Chatterleys Lover Review in Tamil

அந்த மழையில் முழு நிர்வாணமாக: சமீபத்தில் வெளியான மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை கதையில் மழையில் காதலர்கள் இருவரும் ஓடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அந்த காட்சிகளுக்கு எல்லாம் அஸ்திவாரமே இந்த மழை சீனாகத்தான் இருக்கும் என்பது போல உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் எந்தவொரு மர்ம பாகத்தையும் (பொதுவாக அந்த இடங்களை மறைத்துவிடுவார்கள்) மறைக்காமல் இருவரும் மழையில் அப்படியொரு ஆட்டம் போடும் காட்சி ஒன்றே போதும் இந்த படத்தை இளைஞர்கள் ஏன் அதிகம் பார்க்கின்றனர் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பிளஸ்: பிரெஞ்சு நடிகை லாரே டி கிளெர்மண்ட் டானரி (Laure de Clermont-Tonnerre) இயக்குநராக மாறி இயக்கி உள்ள இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இந்த படத்தில் நடித்த முன்னணி நடிகர்களான எம்மா கொரின் (லேடி சட்டர்லி), ஜேக் ஓ கானெல் (ஆலிவர் மெல்லார்ஸ்) மற்றும் சட்டர்லியாக நடித்த மேத்யூ டக்கெட்டின் நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறி உள்ளது.

ஒளிப்பதிவு, இசை, என டெக்னிக்கலாக படம் செம ஸ்ட்ராங். ஒரு கட்டத்தில் தனது மனைவி இன்னொருவருடன் பழகுவதை அறிந்து கேள்வி எழுப்பும் போது, நான் அவரை காதலிக்கிறேன். என் வயிற்றில் வளரும் குழந்தை அவருடைய குழந்தை தான் என சட்டர்லி சொன்னதும் மனைவிக்கு விவாகரத்து கொடுக்க முடியாது என்றே சட்டர்லி சொல்லி விடுவார்.

Lady Chatterleys Lover Review in Tamil

அதன் பின்னர் கிளைமேக்ஸில் காதலர்கள் இருவரும் எப்படி ஒன்று சேருகின்றனர் என்கிற காட்சியே ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது சிறப்பு.

மைனஸ்: லேடி சட்டர்லி தனது கணவரை விடுத்து இன்னொரு வாலிபரை தேடிச் செல்ல காரணமே காமம் மட்டும் தான் என்பது கதையளவில் மிகப்பெரிய மைனஸ் ஆகவே உள்ளது.

மேலும், ஒரு கட்டத்தில் மேல் அதிக ஆபாசக் காட்சிகளே காதல் படமாக இதை பார்க்க முடியாத சூழலுக்கு கொண்டு வந்து விடுவது பெரிய மைனஸ் தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.