பிரித்தானியாவில் பயங்கர பேருந்து விபத்து: 10 பேர் வரை படுகாயம்


பிரித்தானியாவின் வால்தம் அபே பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து விபத்து

பிரித்தானியாவில் எசெக்ஸ்(Essex) பிராந்தியத்தில் உள்ள வால்தம் அபே(Waltham Abbey) பகுதியில் செவ்வாய் கிழமை காலை பேருந்து விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது.

மார்ஷ் மலைப்பகுதியில் 11.35 மணியளவில் நடந்த இந்த விபத்தில் வெக்டேர் வழித்தட 505 பேருந்தும், வேன் ஒன்றும் மோதிக் கொண்டுள்ளது.

Vectare route 505 bus Essex Live

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு இங்கிலாந்து ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் எசெக்ஸ் காவல்துறை பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பேருந்து மோதல் விபத்தில் 10 பேர் வரை காயமடைந்த நிலையில், அதில் நான்கு பேர் தீவிர காயங்களுடன் தரைவழி ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் இளவரசி அலெக்ஸாண்ட்ரியா மருத்துவமனைக்கு (Princess Alexandria Hospital) சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, அதே நேரத்தில் விபத்திற்கான காரணங்கள் குறித்தும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

பேருந்து சேவைகள் நிறுத்தம்

இந்த விபத்தை தொடர்ந்து வெக்டேர்(Vectare ) பேருந்து ட்விட்டரில் வெளியிட்ட தகவலில், 505 வழித்தடத்திற்கான பேருந்து சேவைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் சிறிது நேரத்திற்கு பிறகு மற்றொரு ட்விட்டர் பதிவில், இன்றைய நிகழ்வில் சாலை பயணிகள் யாரையேனும் பாதித்து இருக்கலாம், இத்தகைய அதிக அளவிலான இடையூறுகளுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம், இவற்றில் இருந்து விரைவில் வெளியே வர கடினமாக முயற்சிக்கிறோம் என்று உறுதியளிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.