மூணாறு அருகேயுள்ள மாட்டுபட்டி அணையில், படகுகள் மோதிய விபத்தில், சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணியர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கேரளாவில் மூணாறு அருகேயுள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு அதிவேக படகுகள் உட்பட பல வகை சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், நேற்று அதிவேக படகில் பயணம் செய்தனர்.
அப்போது எதிர்பக்கத்தில் இருந்து வந்த மின்துறைக்கு சொந்தமான அதிவேக படகு பலமாக மோதியது. இதில் சுற்றுலா படகு நிலைகுலைந்த நிலையில், சென்னை சுற்றுலா பயணியர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அவர்கள் பதற்றத்தில் இருந்ததால், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் பரிசோதனை முடிந்து அனுப்பப்பட்டனர்.
சுற்றுலா படகு உட்பட சாகச சுற்றுலாவில் பயணியருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஓரிரு மணி நேரத்தில் சுற்றுலா படகுகள் விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement