அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் ரத்து – தமிழ்நாடு அரசு

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்பதை, ஐந்து வயதாக உயர்த்தும் வகையில் சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை செயலபடுத்தும் விதமாக ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 வயது முதல் 12 வயது வரையிலான சிறார்களும் அரை டிக்கெட் எடுத்து பயணிக்கலாம் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.