இனி பேருந்துகளில் 5 வயது வரை கட்டணம் தேவையில்லை..!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து வயது வரை கட்டணம் தேவையில்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தமிழக போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக மூன்று வயது வரை இலவசம் என இருந்த நிலையில் தற்போது ஐந்து வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 3 முதல் 12 வயது வரை அரை டிக்கெட் என இருந்து வந்த நிலையில் தற்போது ஐந்து முதல் 12 வயது வரை அரை டிக்கெட் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.