கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில்இ அம்மாவட்டத்தில் உள்ள 55 பட்டதாரிகளுக்குஇ மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால்இ நேற்று (23) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முதற் கட்டமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது உரையாற்றிய ஆளுநர் செந்தில் தொண்டமான்…
‘நாட்டில் தற்போதைய பொருளாதார சிக்கல் காரணமாக போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்துள்ளது. அதற்கிணங்கஇ அருகிலுள்ள பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுமாயின் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன்இ நியமனம் பெறும் ஒவ்வொரு ஆசிரியரும் அடுத்த வருடத்தினுள் 10 பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயகஇ ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.