சென்னை: கன்னியாகுமரியில் அடுத்த அதிரடியை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. இதற்கான முக்கிய அறிவிப்பையும் திமுக அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உலக புகழ் பெற்ற சுற்றுலாதளமான கன்னியாகுமரியில், சுற்றுலா பயணிகள் குவிந்துகொண்டிருக்கிறார்கள்.. திருவேணி சங்கமத்தில் சூரியன் உதயம் காட்சிகளை கண்டுக்களித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
அதிகாலை மற்றும் மாலையில் கடலில் சூரியன் உதயம் மற்றும் மறையும் இயற்கை நிகழ்வை கண்டு ரசிப்பதற்காகவும் கடல்நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சவாரி மூலமாக சென்று காண்பதற்காகவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், வந்தவண்ணம் உள்ளனர்..
போட்டோக்கள்: திருவேணி சங்கத்தில் குவிந்து தங்கள் செல்போன்களில் போட்டோ எடுத்தும் மகிழ்கிறார்கள்.. கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகுமூலம் சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவதால் கடை வியாபாரிகளும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.. இந்த சுற்றுலாதளத்தை மேலும் சிறப்பாக்க, திமுக அரசு முயற்சித்து வருகிறது. அதில் ஒன்றுதான், கண்ணாடி பாலம்.
கன்னியாகுமரி கடலில் அருகருகே உள்ள பாறைகளில் சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலை உள்ளது. இந்த இடங்களுக்கு கடல் கரையில் இருந்துதான், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகளுக்கான படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.. ஆனால், கடல் நீர் மட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் திருவள்ளுவர் சிலை பாறைக்கு படகு போக்குவரத்து தடைப்படுகிறது.
கண்ணாடி பாலம்: அதனால்தான், திருவள்ளுவர் சிலை பாறைக்கும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற்பரப்பை கண்ணாடி இழைப்பாலம் கொண்டு இணைக்க ரூ.30 கோடியில் திட்டம் தீட்டப்பட்டது.. இது தொடர்பாக ஆய்வுப் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரண்டு பாறைகள் இடையே அமைக்கப்பட உள்ளது இந்த கண்ணாடி இழை பாலம்.. இந்த பாலத்தில் நடந்து செல்லும்போது, சுற்றுலா பயணிகளின் பாதங்களின் கீழே உள்ள நீல வண்ண கடலை வெகுவாக ரசிக்க முடியுமாம். பார்ப்பதற்கே இந்தக் காட்சி வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள்.
கண்ணாடி இழை பாலம்: இத்தனை சிறப்புமிக்க கண்ணாடி இழை பாலத்துக்கு, இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் எ.வ.வேலு இதற்கான அடிக்கல்லை நாட்டியதுடன், செய்தியாளர்களுக்கும் பேட்டி தந்தார்.
அப்போது அவர் சொன்னதாவது: கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த 2 படகுகளிலும் தற்போது சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச சவாரி செய்யும் வகையில் இன்று முதல் இயக்கப்பட்டுஉள்ளது. இந்த படகுகளில் குளிர்சாதன வசதிகளும் செய்யப்பட்டுஉள்ளது.
இதில் குளிர்சாதன வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்யரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சந்தோஷம்: கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையேரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் பாலம் அமைக்கும்பணி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் நிறைவுபெறும்” என்று தெரிவித்துள்ளார்.. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.