முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை இராணுவத்தின் செயற்பாடு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் கொள்கைக்கு அமைவாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மொத்தம் 70.05 ஏக்கர் காணிகளை வியாழக்கிழமை (18) விடுவித்தது.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் புதுக்குடியிருப்பு 68 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு பிரதேச செயலாலர் மற்றும் அரச அதிகாரிகளை அழைத்து 8 காணிகளுக்கான ஆவணங்களை கையளித்தார்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடீ விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மொத்தம் 70.05 ஏக்கர் கொண்ட அந்த 8 காணிகள் தேவிபுரம், ஆனந்தபுரம், மல்லிகைத்தீவு, சுதந்திபுரம், உடையர் கட்டு (தெற்கு), சாலை, வெள்ள முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
6 வது கெமுனு ஹேவா படையணி, 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி, 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, மற்றும் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றின் முகாம்கள் அந்த இடங்களில் நிலை நிறுத்தப்படிருந்தன, அவை இப்போது அந்தந்த படையலகின் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி தலைமையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், காணி அதிகாரி, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், மாவட்ட வன அதிகாரி, 68 வது காலாட் படைபிரிவின் கேணல் பொதுப்பணி, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.