வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி ஹூண்டாய் எக்ஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியாக உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் வரவுள்ள காருக்கு போட்டியாக டாடா பஞ்ச் உள்ளது.
ரூ.6.50 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற எக்ஸ்டர் எஸ்யூவி மாடலுக்கு சவாலாக டாடா பஞ்ச், நிசான் மேக்னைட், சிட்ரோன் C3, புதிய மஹிந்திரா XUV100 எஸ்யூவி ஆகியவை உள்ளது.
Hyundai Exter Launch details
அதிகாரப்பூர்வமாக ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் வெளிப்புற தோற்ற அமைப்பு, குறிப்பிடதக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் , கனெக்ட்டிவிட்டி வசதிகளை ஏற்கனவே ஹூண்டாய் அறிவித்துள்ளது.
81 hp பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 69 hp பவர் மற்றும் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கும்.
EX, S, SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. எல்இடி புரொஜெக்டர் விளக்குகள் ஹெட்லைட், H- வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் உடன் 6 ஏர்பேக்குகள் (டிரைவர், பயணிகள், கர்டைன் & பக்கவாட்டு) கொண்டுள்ளது.
40க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பாக எலக்ட்ரிக் சன்ரூஃப் இரட்டை கேமரா உடன் கூடிய டேஸ்கேம் (Dashcam), ISOFIX, ஹெட்லேம்ப் எஸ்கார்ட் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா வசதி ஆகியவை உள்ளது.