ஆளும் பாஜகவை வீழ்த்த நாட்டில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதும், பின்பு சிதறுவதுமாக இருக்கும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குப்பின் மீண்டும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளன.
அதன்படி, காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடத்துசாரிகள், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்குரே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட 19 கட்சிகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரே அணியில் நின்று பாஜகவை எதிர்க்க உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், வருகின்ற மே 28ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு முன்பு எம்பிக்கள் இடம் மத்திய அரசு கருத்து கேட்கவில்லை என்றும், குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் இயங்காது என்ற போதும், அவருக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை மற்றும் சிவி சண்முகம் கலந்து கொள்ள உள்ளனர்.