வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூரில் இன்று இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த 3ம் தேதி பேரணி நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
மாநிலம் முழுதும் கலவரம் பரவியதில் 70 பேர் உயிரிழத்தனர். பலர் காயமடைந்தனர். ரூ. பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. 10 நாட்களுக்கு மேல் பதற்றம் காணப்பட்ட நிலையில் கலவரம் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் இன்று இளைஞர் ஒருவர் ஆயுதம் ஏந்திய மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இருவர் காயமடைந்தனர். இதன் எதிரொலியாக மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement