ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய மோடி அழைப்பு

சிட்னி இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் கடந்த திங்கள் அன்று மூன்று நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்தார். வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில். “இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பொருத்தவரை, தகவல் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், தொலைப்பேசி, செமிகண்டக்டர்ஸ், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,பசுமை ஹைட்ரஜன், கல்வி, மருந்து உற்பத்தி, சுகாதாரம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, கனிமவளங்கள்,   விவசாயம், உணவு பதப்படுத்துதல்  உள்ளிட்ட துறைகளில்  நீங்கள் முதலீடுகளைச் செய்ய முடியும். இந்தியாவில் தொழில் தொடங்குவது தற்போது எளிதாக்கப்பட்டுள்ளது. புகார்களைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்நிய நேரடி முதலீட்டுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.” […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.