Ather 450x Price hike – ஏதெர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ₹ 32,500 உயருகின்றது

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஏதெர் எனெர்ஜி 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ₹ 32,500 வரை உயர்த்தப்பட்ட உள்ளதை அதிகார்ப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. FAME-II மானியம் குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விலை உயர்வு இருசக்கர வாகன தயாரிப்பாளர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.

FAME-II Subsidy

இந்திய அரசு மின்சார பேட்டரி வாகனங்களுக்கு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வழங்கி வருகின்ற FAME-II மானியத்தில் 10,00,000 இலக்கை இருசக்கர வாகனங்கள் நெருங்கியுள்ளதால், மானியத்தை முற்றிலும் நிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கனரக தொழில்துறை அமைச்சகம் மூன்று மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பயன்படுத்தப்படாத நிதியிலிருந்து E2W களுக்கு கூடுதலாக ரூ.1,500 கோடியை ஒதுக்க முடிவு செய்துள்ளது.

FAME-II மானியம் kWh ஒன்றுக்கு ரூ.15,000க்கு பதிலாக இனி ஒரு kWh பேட்டரி திறனுக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட உள்ளது. இருந்தாலும், வாகனத்தின் முந்தைய 40 சதவீத மானியத்துடன் ஒப்பிடும்போது, E2W களுக்கு தொழிற்சாலை செலவில் (ரூ.1.50 லட்சத்தை தாண்டக்கூடாது) ஜூன் 1 ஆம் தேதி முதல் 15 சதவீதமாக மட்டும் இருக்கும்.

Ather 450X Price Hiked

தற்பொழுது ஏதெர் 450x  எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியம் ரூ.55,000 வழங்கப்படுவதனால் விலை

450X base  – ₹1,16,379

450X Pro Packed – ₹1,46,743

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

இனி, ஜூன் 1 ஆம் தேதி முதல் FAME-II  மானியம் வெறும் ரூ.22,500 மட்டுமே வழங்கப்படும் ஆகவே, புதிய தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் பின்வருமாறு;-

450X base  – ₹1,48,879

450X Pro Packed – ₹1,79,243

இந்த விலை உயர்வினை தனது ட்வீட்டர் மற்றும் இணையதளத்திலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ather-450x-price-hike

3.7 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6.4 kW பவரை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 26 Nm டார்க் வழங்குகின்றது. தொடக்க நிலை வேரியண்டில் ஒற்றை ரைடிங் மோடு மட்டுமே பெற்றுள்ளது. டாப் 450X புரே பேக்கில் Warp, Sport, Ride, Eco,  மற்றும் SmartEco போன்ற ரைடிங் மோடுகள் உள்ளன.

அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 146 கிமீ வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் முழுமையான சார்ஜில் 100 கிமீ வரை வழங்கும்.

Ather Specification 450X 450X Pro-Packed
Battery pack 3.7 kWh 3.7 kWh
Top Speed 90 Km/h 90 Km/h
Range (claimed) 146 km 146 km
Riding modes default Warp, Sport, Ride, Eco, SmartEco

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.