சென்னை: Thiyagarajan Kumararaja (தியாகராஜன் குமாரராஜா) அத்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர் இளையராஜாவாகத்தான் இருப்பார் என இயக்குநர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்திருக்கிறார்.
தி நியூயார்க் டைம்ஸில் வாசகர்கள் தங்களது காதல் அனுபவங்களை கட்டுரைகளாக மாற்றி அனுப்பினர். அது மாடர்ன் லவ் என்ற பெயரில் புத்தகமாக உருமாறியது. பின்னர் அதனை அமேசான் ப்ரைம் வீடியோ வெப் சீரிஸாக இரண்டு சீசன்களை தயாரித்து வெற்றி கண்டது. அது இப்போது தமிழிலும் மாடன் லவ் சென்னை என்ற பெயரில் ஆறு எபிசோடுகளை கொண்ட ஆந்தாலஜியாக உருவாகியிருக்கிறது.
உருவாக்க தயாரிப்பாளர்: லாலாகுண்டா பொம்மைகள், இமைகள், மார்கழி, காதல் என்பது கண்ணுல இருக்குற ஹார்ட் எமோஜி, பறவை கூட்டில் வாழும் மான்கள், நினைவோ ஒரு பறவை ஆகிய ஆறு கதைகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு கதையையும் இயக்கியிருக்க உருவாக்க தயாரிப்பாளர் தியாகராஜன் குமாராஜா ஆவார். அவர் நினைவோ ஒரு பறவை கதையை இயக்கியிருக்கிறார்.
இளையராஜா இசை: 1000 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இசைஞானி இளையராஜா காலத்திற்கேற்ப இந்த ஆந்தாலஜிக்கும் இசையமைத்திருக்கிறார். பறவை கூட்டில் வாழும் மான்கள், நினைவோ ஒரு பறவை, மார்கழி ஆகிய கதைகள் இளையராஜாவின் இசையமைபில் உருவாகியிருக்கின்றன. அவரது இசை கதைக்கு ஒன்றிப்போவதாக பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் தியாகராஜன் குமாரராஜா இளையராஜா குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
தியாகராஜன் குமாரராஜா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், ” இளையராஜா அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர். அவர் மிகவும் பணிவானவர். அதையே பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவருடன் பணியாற்றுவது மிகவும் கடினம் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அதில் உண்மை கிடையாது. அவரைப் பொறுத்தவரை அவருடைய நேரத்தை வீணடிக்க கூடாது. அவரிடம் சென்று நம்முடைய புத்திசாலித்தனத்தை காட்ட முயற்சிக்கக் கூடாது. தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லிவிடலாம்.
நேரடியாக சொல்லிவிடுவார்: ஏனென்றால், அதைப் பற்றி அவர் அக்கறைப்பட மாட்டார். அவருக்கு பிடிக்காத படத்தை அவரிடம் கொண்டு சென்றால்கூட அவர் இந்தப் படம் சரியில்லை என்று நேரடியாக சொல்லிவிடுவார். ஆனால், அதன் பின்னர் அப்படத்தை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்துவிடுவார். படம் எப்படி உருவானால் என்ன எனது வேலை இசையில் மட்டும்தானே இருக்கிறது என்பார். இந்தத் தெளிவை புரிந்துகொண்டால் அவரைப் புரிந்துகொள்வது எளிதாகிவிடும்.
நிலாவில் வைத்தாலும் தாண்டுவார்: நீங்கள் 200 அடிக்கு ஒரு கம்பத்தை நட்டு வைத்தால், இளையராஜா அதை தாண்டி குதிப்பார். 10 ஆயிரம் அடிக்கு வைத்தாலும், அதைத் தாண்டி குதிப்பார். நிலாவில் வைத்தால் அவர் அதையும் தாண்டிவிடுவார். நமக்கு எது தேவை என்று நாம் சொல்கிறோமோ அதை அவர் கொடுப்பார். அது நமது கையில்தான் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் அவருடன் சென்று பணிபுரிய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எப்போதும் இளமையானவர். அவருடைய வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது.
ஒன் அண்ட் ஒன்லி இளையராஜா: நான் சொல்வது மிகைப்படுத்துவது போல தோன்றலாம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருக்கும் முக்கியஸ்தர்களை குறைத்து குறைத்து மிகவும் முக்கியமான அல்லது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபரை நிறுத்தினால் அவர் இளையராஜாவாகத்தான் இருப்பார். அது நடிகர்களாக இருக்கலாம், கவிஞர்களாக இருக்கலாம். ஆனால் அந்த கடைசி மனிதனாக இளையராஜாவே இருப்பார்” என்றார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.