இலங்கையில் வெற்றிலையில் இருந்து புதிய கண்டுபிடிப்பு!

வெற்றிலையைப் பயன்படுத்தி இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்தார்.

வெற்றிலையைப் உபயோகித்து பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, வெற்றிலை பாக்கு உற்பத்தியின் ஆராய்ச்சி வெற்றிகரமாக உள்ளது.

இதேவேளை, வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சாப்பிடுபவர்களுக்கும், வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கும் வகையில் இனிப்பு பண்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், புகையிலைக்கு பதிலாக அதிக சர்க்கரை மற்றும் உணவு நிறம் சேர்க்கப்படுகிறது. வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சர்க்கரை, குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் போன்ற பல பொருட்களைப் பயன்படுத்தி இதை தயாரிக்க முடியும் என்றும், வெற்றிலையில் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இந்த இனிப்பை பயன்படுத்துவதால் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகவும் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுது நேரத்தில் குறைந்தளவிலான பொருட்களைப் பயன்படுத்தி இப்பொருளைத் தயாரிக்க முடியும் என்பதால் சுயதொழிலாக இதனைச் செய்ய முடியும் எனவும், அதில் ஆர்வம் இருந்தால் தேவையான அறிவையும் பயிற்சியையும் தமது ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.