அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகன முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக கோபா குழுவினால் 2023.03.23 ஆம் திகதி பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

2023.03.23ஆம் ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கூடியபோது அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் திகதிகளுடன் கூடிய வேலைத்திட்டமொன்றை 2023.05.15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அறிவுறுத்தி பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இதற்கு அமைய அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்காக கோபா குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தலைமையில் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் கூடியது. இதற்கமைய பதின்மூன்று அரசாங்க நிறுவனங்களுக்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க விளக்கமளித்தார். இதில் கீழ்வரும் நிறுவனங்கள் 13ற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

1. ஆட்பதிவுத் திணைக்களம்
2. இலங்கை சுங்கம்
3. ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
4. கமநலத் திணைக்களம்
5. இலங்கை தர நிர்ணய நிறுவனம்
6. மோட்டார் வாகனத் திணைக்களம்
7. மதுவரி திணைக்களம்
8. உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
9. கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
10. பதிவாளர் நாயகம் திணைக்களம்
11. உணவுப் பாதுகாப்புப் பிரிவு, சுகாதார அமைச்சு
12. கொழும்பு மாநகரசபை
13. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு

இங்கு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், பயன்படுத்தப்படும் மென்பொருளைப் புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் குறித்து கோபா குழு நீண்ட நேரம் விவாதித்தது.ஆட்பதிவுத் திணைக்களத்தில் தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் அங்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படும் மென்பொருள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) இப்பணிக்கு தமது நிறுவனத்தினால் வழங்கக் கூடிய பங்களிப்புத் தொடர்பில் விளக்கமளித்தது. இக்கூட்டத்தில் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டயானா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ ஜே. சி. அலவத்துவல, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ வீரசுமண வீரசிங்க, கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க மற்றும் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.