Ajith and Shalini – பீக்கில் இருந்த ஷாலினி.. திருமணத்திற்காக அஜித் செய்த பெரிய காரியம்

சென்னை: Ajith and Shalini (அஜித் மற்றும் ஷாலினி) கரியரின் உச்சத்தில் இருந்த ஷாலினியை திருமணம் செய்துகொள்வதற்காக அஜித் செய்த மிகப்பெரிய காரியம் தெரியவந்திருக்கிறது.

சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடித்த படம் அமர்க்களம். காதல் மன்னன் வெற்றிக்கு பிறகு அஜித்தும், சரணும் இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்தனர். ஹீரோயினாக ஷாலினி கமிட்டானார். 1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி அஜித்தை முழு ஆக்‌ஷன் ஹீரோ என்ற இமேஜுக்குள்ளும் கொண்டு வந்து நிறுத்தியது.

மலர்ந்த காதல்: இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் அஜித்தும், ஷாலினியும் காதலிக்க ஆரம்பித்தனர். ஷாலினியை காதலிக்கும்படி அஜித்குமார் படத்தில் நடிப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் இருவருக்குள்ளும் உண்மையான காதலை வரவழைத்துவிட்டது. படத்தின் ஒரு காட்சியில் நடிக்கும்போது அஜித் வைத்திருந்த கத்தி உண்மையாகவே ஷாலினியின் கையை கிழித்துவிட பதறிப்போனார் அஜித். அதனையடுத்து ஷாலினி மீது மிகுந்த அக்கறையையும் கொண்டார்.

அஜித் செய்த ப்ரோபோஸ்: படத்தின் ஷூட்டிங் பிரேக்கில் சரண், ஷாலினி அமர்ந்திருந்தனர். அப்போது அஜித்குமார் சரணிடம் சீக்கிரம் படத்தை முடிச்சிடுங்க இல்லைனா ஷாலினியை லவ் பண்ணிடுவேனோனு பயமா இருக்கு என கூறி தனது காதலை ப்ரோபோஸ் செய்தார். ஏற்கனவே ஷாலினிக்கும் அஜித்தை பிடித்திருக்க ஒருவழியாக இரண்டு பேரும் காதலிக்கவும் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்களின் காதல் அவர்களை தவிர அப்போது படத்தின் இயக்குநருக்கேக்கூட தெரியாது.

ஷாலினி கொடுத்த கிஃப்ட்: இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு நாள் சரணை அழைத்த ஷாலினி, ஒரு பொக்கேவை கொடுத்து அஜித் வீட்டு போர்டிக்கோவில் வைக்க சொன்னார். மேலும் ஒரு பைக்கையும் பரிசாக கொடுத்தார். அப்போதுதான் சரணுக்கு தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து இந்த விஷயம் வெளியிலும் காட்டுத் தீ போல் பரவ அஜித்தும், ஷாலினியும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

தடை போட்ட அப்பா: ஆனால், அஜித்தை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது ஷாலினி தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பீக்கில் இருந்தார். இதன் காரணமாக அவரது தந்தை இந்த நேரத்தில் திருமணம் தேவையில்லை. ஷாலினியின் வளர்ச்சிக்கு காதல் ஒரு தடையாக இருக்கிறது என யோசித்திருக்கிறார். இருப்பினும் ஷாலினி மீது மிகுந்த காதல் கொண்ட அஜித் அதிரடியாக ஒரு முடிவெடுத்தார்.

It has been revealed that Ajith did the biggest thing to marry Shalini

பணம் கொடுத்த அஜித்: அதாவது, ஷாலினி இன்னும் எத்தனை வருடங்கள் மார்க்கெட்டில் இருப்பார், அவர் எவ்வளவு சம்பாதிப்பார் என கணக்கு போட்ட அஜித்குமார் அந்தப் பணத்தை நேரடியாக ஷாலினியின் தந்தையிடம் சென்று கொடுத்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஷாலினி வந்த பிறகு அஜித்தின் வாழ்க்கை ரொம்பவே பக்குவப்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இந்தத் தகவலை ஆர்.எஸ்.அந்தணன் பகிர்ந்துகொண்டார்.

விடாமுயற்சி அஜித்: அஜித்குமார் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அதனையடுத்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.