இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Thalapathy Vijay: தான் விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் தளபதி 68 படத்தின் ஹீரோயின் யார் என்பதை வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டாராம்.
தளபதி 68லியோ படத்தை அடுத்து விஜய்யை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறதோ என அனைவரும் காத்திருந்தார்கள். இந்நிலையில் தான் அந்த வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்திருக்கிறது. விஜய்யின் நண்பனாக நடித்த வெங்கட் பிரபு தற்போது தளபதியை இயக்கப் போகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். எல்லாம் சரி, படத்தின் ஹீரோயின் யாருப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.சரத்பாபு”போன மாசமே கொன்னுட்டாங்க” நடிகர் பார்த்திபன் வேதனை!க்ரித்தி ஷெட்டிதளபதி 68 படத்தின் ஹீரோயினை வெங்கட் பிரபு தேர்வு செய்து சில மாதங்களாகிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் அண்மையில் வெளியான கஸ்டடி படத்தில் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். அவரை தான் தளபதி 68 படத்திலும் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் வெங்கட் பிரபு.
ரசிகைநான் தளபதியின் ரசிகை என்று கூறியுள்ளார் க்ரித்தி ஷெட்டி. ரசிகை என்றால் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் ஆசை இல்லாமலா இருக்கும். க்ரித்தியின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறாரம் வெங்கட் பிரபு. கஸ்டடி பட வேலை நடந்தபோதே தளபதி 68 ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி தான் என முடிவு செய்துவிட்டாராம்.
உப்பேனாஉப்பேனா தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனவர் க்ரித்தி ஷெட்டி. அந்த படத்தை விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை வைத்து தமிழில் ரீமேக் செய்ய விரும்புகிறார்கள். உப்பேனா ரீமேக்கில் ஜேசன் சஞ்சய்யின் ஜோடியாக 19 வயதே ஆன க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.
கோபிசந்த்முன்னதாக தளபதி 68 படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும், அதை கோபிசந்த் மலினேனி இயக்குவார் என்றும் கூறப்பட்டது. தளபதி விஜய் ஹீரோயினாக நடிக்க வைக்க க்ரித்தி ஷெட்டியிடம் கோபிசந்த் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் இயக்குநர், தயாரிப்பாளர் மாறிய நிலையிலும் ஹீரோயின் மாறவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
Thalapathy Vijay: 2 முறை மிஷ்கினின் கழுத்தை பிடித்த விஜய்: படத்துக்காக இல்லை
https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/do-you-know-this-about-thalapathy-vijay-and-mysskin/articleshow/100491922.cms
ரஷ்மிகாமுன்னதாக வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக தளபதியின் ரசிகையான ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இதையடுத்து தளபதி 68 படத்தில் மேலும் ஒரு விஜய் ரசிகை ஹீரோயினாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபுதளபதி 68 பட அறிவிப்பு என்னவோ தற்போது தான் வெளியானது. ஆனால் படத்தை 10 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டார்கள். உன் இயக்கத்தில் நான் நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்திருக்கிறார் விஜய். ஆனால் லியோ பட வேலை முடியும் வரை யாரிடமும் சொல்லக் கூடாது என்று வெங்கட் பிரபுவிடம் சத்தியம் வாங்கியிருக்கிறார். தளபதி படத்தை இயக்கப் போறேனே என்று யாரிடமும் சந்தோஷமாக கூற முடியாமல் 10 மாதமாக அமைதி காத்திருந்திருக்கிறார் வெங்கட் பிரபு.
Thalapathy 68: 10 மாசமா விஜய் பற்றிய ரகசியத்தை காப்பாற்றிய வெங்கட் பிரபு