பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு – 2023 (ஆண்கள்) காற்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்றதில் இலங்கை இராணுவ காற்பந்து வீரர்கள் இரண்டு கோல்களை அடித்து காற்பந்து ரசிகர்களை பரவசப்படுத்தினர்.
இரு அணிகளும் தீவிரமாக விளையாடிய போதிலும் இலங்கை இராணுவ காற்பந்து வீரர்கள் கடற்படை அணியை தோற்கடித்து வெற்றியைடைந்தனர். இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கோப்ரல் எல்சிஎஸ்கே மென்டிஸ் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்எஎ. ரகுமான் ஆகியோர் சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
இறுதிப் போட்டியில் 02 – 01 கோல் கணக்கில் இலங்கை இராணுவ வீரர்கள் வெற்றியடைந்தனர். ‘பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு’ ஆண்களுக்கான கடின போட்டியில் காற்பந்தின் சாம்பியன் பட்டத்தை இராணுவ அணி பெற்றுக் கொண்டது.
பெண்கள் பிரிவில் இலங்கை கடற்படை மகளிர் காற்பந்து அணி சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொண்டதுடன், இலங்கை இராணுவ மகளிர் அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ ஒழுக்க பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எசிஎ த சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பிஎஸ்சீ, இலங்கை இராணுவ காற்பந்து கழகத்தின் தலைவர் பிரிகேடியர் கேஎயூ கொடித்துவக்கு உட்பட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.