போபால்: இளம்பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை குற்றங்களும், பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் மாறி கொண்டிருக்கிறது.
குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு கணக்கெடுப்பும் சொல்கிறது… குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், அநீதிகள் அதிக அளவில் காணப்படுவதாக இருப்பதாக அறிக்கையில் கூறப்படுகிறது..
எதிர்க்கட்சிகள்: இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியும் விமர்சித்து வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், இந்த விவகாரங்களை எல்லாம் எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்றும் தெரிகிறது. கடந்த வாரம்கூட, சூரத்தில் ஒரு பயங்கரம் நடந்தது.. சூரத்தை சேர்ந்தவர் நிகுஞ்ச் குமார் அம்ரித் பாய் படேல்.. மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு, படேல் மட்டும் பணி நிமித்தமாக, சூரத்தில் வசித்து வந்துள்ளார்.
அப்போது இளம்பெண் ஒருவருடன் பழக்கமாகி உள்ளது.. அந்த பெண்ணிடம், தனக்கு திருமணமாகி மனைவி இருப்பதையே மறைத்துவிட்டு, உருகி உருகி காதலித்துள்ளார்.. ஒருகட்டத்தில் படேல், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற உண்மை அந்த பெண்ணுக்கு தெரிய வரவும் அதிர்ச்சியடைந்தார்.. படேலை விட்டு விலக நினைத்தார்..
தனி ரூம்: ஆனால், ஆத்திரமடைந்த படேல், காதலியை கடத்தி கொண்டுபோய், தனியாக ரூம் ஒன்றில் அடைத்து வைத்து, கேபிள் வயரால் சரமாரியாக அடித்துள்ளார்.. பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.. அப்போது, அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூளையும் திணித்துள்ளார்.. இதை போட்டோ, வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார்.. இது தொடர்பான போலீசார் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், இதேபோல இன்னொரு கொடுமை மறுபடியும் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
போபாலில் விதிஷா என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. சமீபத்தில்தான் இவருக்கு திருமணமாகி உள்ளது.. இவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றின் வேலை பார்த்து வருகிறார். கல்யாணமாகி, ஒருசில மாதங்களிலேயே வரதட்சணை பிரச்சனை இந்த பெண்ணுக்கு ஆரம்பமாகிவிட்டது.. அத்துடன் மாமியார் வீட்டு சித்ரவதையும் ஆரம்பமாகிவிட்டது.. இதனால், பெண்ணின் பெற்றோர்களும், உறவினர்களும் இந்த விஷயத்தில் பலமுறை தலையிட்டு, இவர்களை சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள்.. ஆனாலும், விவகாரம் முடிவுக்கு வரவில்லை..
மாமியார், மச்சினன்: தினம் தினம் வரட்சணை சித்ரவதை அதிகமானது.. ஒருகட்டத்தில் டார்ச்சர் தாங்காமல், அந்தப் பெண் கடந்த 15 நாட்களுக்கு முன்பு, மாமியார் வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல், தன்னுடைய அம்மா வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.. இதனிடையே, மனைவியை காணோம் என்று கணவர் போலீசில் புகார் தந்திருக்கிறார். அப்போதுதான், அம்மா வீட்டிற்கு மனைவி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணின் மாமியாரும், மச்சினரும், மருமகளை தேடி சம்பந்தி வீட்டிற்கு சென்றார்கள்..
“இனிமேல் சண்டை சச்சரவு ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம்” என்று சொல்லி, மருமகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.. ஆனால் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததுமே, டார்ச்சர் வேறு ரூபத்தில் வந்தது.. கணவர்,மாமியார், மச்சினன் என 3 பேரும் ஒன்றுசேர்ந்து, அந்த பெண்ணை ஒரு நாள் முழுவதும், தனியறையில் அடைத்து வைத்ததாக தெரிகிறது.. அத்துடன் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தியுள்ளனர்.. சூடான இரும்பு கம்பியால் அந்த பெண்ணின் உடம்பெல்லாம் சூடு வைத்திருக்கிறார்கள்.. அந்தரங்க உறுப்பிலும் சூடு வைத்திருக்கிறார்கள்..
இரும்பு கம்பி: அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதி மக்களே, வீட்டிற்கு முன்பு ஒன்றுகூடி விட்டனர்.. கதவை தட்டியும் யாரும் திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு ஊர்மக்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.. அப்போதுதான், இளம்பெண்ணின் கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு அந்த பெண்ணை மீட்டு சென்றனர்.. போலீசாருக்கும் தகவல் தந்தனர்..
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கணவர், மாமியார், மச்சினர் என 3 பேரையும் கைது செய்தது.. துன்புறுத்தல் வரதட்சணை கொடுமை மற்றும் பிற பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.. 3 பேருமே இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
நீளும் துயரம்: ஆக, வரதட்சணை பிரச்சனை இன்னமும் நம் நாட்டை விட்டு போகவில்லை.. வரதட்சணையின் அளவுகோல்களும், வடிவங்களும்தான் மாறி உள்ளதே தவிர, வரதட்சணையின் தீவிரம் இன்னமும் அப்படியே நீடிப்பது வருத்தம் தருகிறது.. கல்வி அறிவில் மிகைபெற்ற மாநிலமான கேரளாவிலேயே, வரதட்சணையால் இளம்பெண்களின் உயிர்கள் இன்னமும் பறிக்கப்படுகிறது என்றால், முழுமையான கல்வியறிவு மறுக்கப்படும், வடமாநிலங்களின் நிலைமையை நாம் என்னவென்று சொல்வது??