மத்திய பிரதேசத்தில்தான் இந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவருக்கு லட்சுமி என்ற ராஜகுமாரியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் ஆனதில் இருந்தே கணவன் மனைவிக்குள் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மனைவி ராஜகுமாரி குறித்து போலீஸில் புகார் அளித்துள்ள ரகுராஜ் குஷ்வாஹா, ராஜகுமாரி முன்பின் தெரியாதவர்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து வந்து பேசி வந்ததாக தெரிவித்துள்ளார்.
சோழர் காலத்து செங்கோல்… நாடாளுமன்றத்தில் இருக்கப்போகும் இடம் இதுதான்!
இதுகுறித்து கேட்ட கணவரையும் கணவர் வீட்டாரையும் பொய் வழக்கில் சிக்க வைத்து விடுவேன் மிரட்டியதாகவும் போலீஸில் தெரிவித்துள்ளார். மேலும் தனது 75 வயது தந்தை கல்யாண் சிங் மீது தனது மனைவி பொய்யான பலாத்கார வழக்கை பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாள் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது ஆத்திரமடைந்த அவர் தனது ஆண் உறுப்பை கடித்து குதறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தன்னை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மொரீனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் பின்னர் அங்கிருந்து குவாலியருக்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கு தனக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தன்னை தொடர்ந்து துன்புறுத்தி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் தனது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
Sadha: ஹாலிவுட் நடிகை போல் இருக்கும் சதா.. சிவப்பு நிற மாடர்ன் உடையில் திகைக்க வைக்கும் போட்டோஸ்!
ரகுராஜ் குஷ்வாஹாவின்புகார் கடிதம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோபத்தில் மனைவி, கணவரின் ஆண் உறுப்பை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக துன்புறுத்தும் கணவரிடம் இருந்து காப்பாற்றுமாறு பெண்கள் புகார் அளித்ததை கேள்வி பட்ட நிலையில் ஆண் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து காப்பாற்றுமாறு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.