மைசூர் புலி என்றழைக்கப்படும் திப்பு சுல்தானின் வாள் லண்டனில் 140 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கலைப்பொருட்களை ஏலம் விடும் போன்ஹாம்ஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பை விட 7 மடங்கு அதிக விலைக்கு வாள் ஏலம் போனதாக நிறுவனத்தின், இஸ்லாமிய மற்றும் இந்திய கலைத் தலைவர் ஆலிவர் ஒயிட் தெரிவித்துள்ளார்.
18 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற போரில் திப்பு கொல்லப்பட்ட பிறகு, அரண்மனையின் தனிப் பகுதியில் வாள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு அவரது தைரியத்தின் அடையாளமாக வழங்கப்பட்டதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.