வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: யு.பி.எஸ்.சி தேர்வில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் தேர்வர்கள் ஒரே பெயரில், ஒரே வரிசை எண் , ஒரே ரேங்க் மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். இதில் இருவருமே மதிப்பெண்ணுக்கு உரிமை கொண்டாடுவதால், உண்மையான தேர்வர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆயிஷா பாத்திமா, ஆயிஷா மக்ராணி ஆகிய இரு பெண் தேர்வகளின் தர வரிசை பட்டியலில் இருவரின் வரிசை எண், 7811744, 184-வது ரேங்க் பெற்றுள்ளதாக சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 184-வது ரேங்கிற்கு உரிமை கோரும் இரு தேர்வர்களும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இதில் ஆயிஷா பாத்திமா, தந்தை நஜ்ருதீன், திவாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர். ஆயிஷா மக்ரானி. தந்தை பெயர் சலீமுத்தீன். அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
மேலும் இருவரின் வரிசை எண் ‘7811744’ என உள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு குழப்பம் தெரியாமல் இருவருமே தேர்வு எழுதியதும், நேர்காணலில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆயிஷா பாத்திமா வைத்துள்ள நுழைவுக்கான அட்டையில் யு.பி.எஸ்.சி.,யின் ரகசிய குறி உள்ளது. ஆயிஷா மக்ராணி வைத்துள்ள நுழைவு அட்டையில் ரகசிய குறி இல்லை.
இரண்டையும் வைத்து பார்க்கையில் திவாஸ் பகுதியை சேர்ந்த நஜ்ருதீன் மகள் ஆயிஷா பாத்திமா தான் உண்மையான தேர்வர் என கூறப்படுகிது. இது தொடர்பாக யு.பி.எஸ்.சி., எந்த முடிவையும் அறிவிக்காமலும், தவறு எப்படி நடந்தது என தெரியாலும் குழப்பத்தில் உள்ளது. இதுபோன்ற பெரும்குழப்பம் யு.பி.எஸ்.சி., வரலாற்றில் ஏற்படுவது இதுவே முதல் முறை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement