புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோலின் சிலிர்ப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்..!!

விரைவில் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோலுக்கும் சோழர்கால ஆட்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதற்கு சோழா செங்கோல் என்று பெயரிட்டு அழைத்தாலும், அது பொந்தவே பொருந்தாது.

கடந்த 24-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைக்கப்படவுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து செங்கோல் என்ற இந்த சொல்லும், வரலாறும் மற்றும் அதனுடன் சேர்ந்த தமிழ் மரபும் தேசியளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் செல்லும் போது, அவர்கள் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடும் செங்கோலை கொடுத்துவிட்டுச் சென்றனர். இது ஆட்சி அதிகாரம் மாறியதற்கான அறிகுறியாகும். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆதினம் வாயிலாக செங்கோல் வழங்கப்பட்டது என்று சமீபத்திய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்

அதை தொடர்ந்து நாடே குறிப்பிட்ட அந்த செங்கோலை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியது. செங்கோல் றால் என்ன? அதனுடைய வரலாறு என்ன? என்பதை தேடத் துவங்கினர். நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்படும் செங்கோல் சோழர் காலத்துக்கு சொந்தமானது என்று எண்ணுகின்றனர். ஒவ்வொரு சோழ அரசர்களும் செங்கோல் பயன்படுத்தினார்கள் தான். ஆனால் அவர்கள் மட்டுமே பயன்படுத்தவில்லை. தமிழக நிலப்பரப்பை ஆண்ட ஒவ்வொரு அரசரும் செங்கோலை நிறுவி ஆட்சி நடத்தியுள்ளனர்.

இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறும் போது, கடைசி லார்ட்டாக இருந்தவர் மவுண்ட் பேட்டன். ஆட்சி மாற்றத்தை குறிப்பால் உணர்த்தும் விதமாக செங்கோலை நேருவிடம் கொடுத்துவிட்டுச் செல்ல விரும்பினார் என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதற்காக முன்னாள் பிரதமர் நேரு விழா எடுத்ததாகவும் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

அந்த சமயத்தில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தது. அப்போது முதல்வராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரி. அவர் தான் சோழர் காலத்தில் இப்படியொரு செங்கோல் இருந்தது. அவர்கள் ஆட்சி மாறும் போது செங்கோலை மாற்றுவார்கள். அதனால் நாமும் இதை பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டு செய்தி அனுப்பினார்.

அதற்கு பிறகு தான் மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொள்ள நேரு ஒப்புக்கொண்டார். அதற்கு பிறகு தான் செங்கோல் ஒன்றை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் திருவாரூர் இருந்தது. அங்குள்ள ஆதனித்திடம் செங்கோல் செய்வதற்கான பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அதன்மூலம் செங்கோலை உருவாக்கும் பணி சென்னையைச் சேர்ந்த “வும்மிடி பங்காரு செட்டி” நகைக்கடை நிறுவனத்துக்கு கிடைத்தது.

வும்மிடி எத்திராஜுலு மற்றும் வும்மிடி சுதாகர் இணைந்து செங்கோலை உருவாக்கினர். 5 அடி நீளம் உள்ள அந்த செங்கோலின் தலை பகுதியில் நந்தி சிலை வைக்கப்பட்டது. இது நீதியின் அடையாளமாக திகழ்கிறது. செங்கோல் தயாரிப்பு பணிகள் முடிந்ததும், அதை எடுத்துக்கொண்டு ஆதீனத்தின் துணைத்தலைவர், நாதஸ்வர கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை மற்றும் ஓதுவார் உட்பட 3 பேர் டெல்லி சென்றனர். ஆகஸ்ட் 14, 1947 அன்று மவுண்ட்பேட்டன் பிரபுவை சந்தித்து அவர் கையில் செங்கோலை வழங்கினர். அந்த செங்கோலை அவர் நேருவிடம் வழங்கினார்.

அந்நிகழ்வில் ஏழாம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் மூலம் இயற்பட்ட பாடல் பாடப்பட்டது. ஜவஹர்லால் நேரு இறந்த பிறகு, அந்த செங்கோல் டெல்லியில் இருந்து அலஹாபாத் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜவஹர்லால் நேருவுடன் தொடர்புடைய பல வரலாற்று பொருட்களுடன் நேரு கேலரியில் ஒரு பகுதியாக அந்த செங்கோலும் இருந்தது.

தற்போது அந்த செங்கோல் தான் விரைவில் திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படுகிறது. அதை நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு நாளின் போது மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி வைக்கவுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை விடவும், செங்கோல் நிறுவப்படும் தகவல் வைரலாகி விட்டது. ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், இப்போது மோடி கையால் வைக்கப்படவுள்ளதை நாடே ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.