உலகின் முதல் ஸ்போர்ட்ஸ் டூரர் கார் என ஆஸ்டன் மார்ட்டின் அழைக்கின்ற DB12 கார் இந்திய சந்தையில் ரூபாய் 4.80 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி மூலம் கைகளால் தயாரிக்கப்பட்ட ட்வீன்-டர்போசார்ஜ் 4.0-லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஆஸ்டன் மார்ட்டினின் 110வது பிறந்தநாள் மற்றும் DB பெயரின் 75வது ஆண்டு விழா என இரண்டையும் கொண்டாடும் வகையில் டிபி12 வெளியிடப்பட்டுள்ளது.
Aston Martin DB12
முந்தைய DB மாடல்களில் V12 என்ஜின் ஆனது 1999 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்ட நிலையில், இப்பொழுது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவனத்தால் கைகளால் தயாரிக்கப்பட்ட ட்வீன்-டர்போசார்ஜ் 4.0-லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 680PS மற்றும் 800Nm வெளிப்படுத்துகின்றது. இதில் எட்டு வேக ZF கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
வி12 என்ஜின் வழங்கப்படவில்லை என்றாலும் அதிகபட்ச பவர் மற்றும் டார்க் வழங்குகின்றது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.6 விநாடிகளிலும், அதிகபட்ச வேகம் 325Km/hr ஆக உள்ளது.
டிபி 12 வடிவமைப்பினை பொறுத்தவரை, வடிவமைப்பாளர் மைல்ஸ் நர்ன்பெர்கர், DB12 காருக்கான தனது குழுவுக்கு “செயல்திறன் மற்றும் சக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கம்படி குறிப்பிட்டிருந்தார். அதனை நிரூபிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எல்இடி மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட தனித்துவமான டிஆர்எல் உடன் கூடிய ஹெட்லைட் ஆஸ்டனின் திருத்தப்பட்ட இறக்கைகள் பெற்ற லோகோ பொருத்தப்பட்ட முதல் முறையாக உற்பத்தி காரில் வைக்கப்பட்டுள்ளது.
10.25-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை கேபினின் மையப் பகுதியில் வழங்கியுள்ளது. ‘நீர்வீழ்ச்சி’ என்று அழைக்கப்படும் வகையில் வியத்தகு சரிவான சென்டர் கன்சோலில் உள்ளது. உயர்ந்த ஹெச்டி கொண்ட திரை மற்றும் வெறும் 30 மில்லி விநாடிகளில் தொடு உள்ளீடுகளுக்கு செயல்படும் வகையில், இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களை மெற்ற முதல் ஆஸ்டன் மாடலாகவும் உள்ளது.
புதிய ஆஸ்டன் மார்ட்டின் DB12 காரின் விநியோகம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வாடிக்கையாளர்களைச் சென்றடையும். இந்திய சந்தைக்கு 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.