பாட்னா
பீகார் மற்றும் வைஷாலி மாவட்டத்தின் ஜந்தாஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹர்பிரசாத் கிராமத்தில் வசித்து வந்த 9 வயது சிறுமி கரீனாவை கடந்த 16 ந்தேதி காணவில்லை
இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். போலீசார் தேடுதல் வேட்டையில், வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில், மிகவும் மோசமான நிலையில், குழந்தையின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். குழந்தியின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது. மேலும் முகத்தில் ஆசிட் ஊற்றபட்டு இருந்தது. அடையாளம் தெரியாத குழந்தையின் சடலத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.
கொலையாளிகள் சிறுமியின் கைவிரல்களை வெட்டி, உடலில் ஆசிட் ஊற்றி எரிக்க முயற்சித்து உள்ளனர். அந்த அப்பாவி சிறுமியின் தந்தை கூலி வேலை செய்து வந்தவர், வேலைக்காக வீட்டை விட்டு வெளியூர் சென்று வந்தார். உயிரிழந்த மாணவி கரீனா சிறிய சகோதரர்களுடன் வீட்டில் இருந்து வந்தார்.
இதுகுறித்து வைஷாலி போலீஸ் சூப்பிரெண்டு ரவி ரஞ்சன் குமார் கூறியதாவது:-
இந்த வழக்கை விசாரித்தபோது, கரீனாவின் 13 வயது மூத்த சகோதரியின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர் ரகசியமாக கண்காணீக்கப்பட்டார். அவர் மொபைல் கால் டேட்டாவை சோதனை செய்து பார்த்த போது உண்மை தெரிய அவ்ந்தது. போலீசார் அவரை அழைத்து சென்று விசாரித்ததில், உண்மை தெரியவந்தது.
அவர் 18 வயது இளைஞனை காதலிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி பெற்றோர் வேறு ஊருக்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். வீட்டில் இரண்டு சிறுமிகள் மட்டுமே இருந்து உள்ளனர்.
பெற்றோர் வீட்டில் இல்லாததால், கரீனாவின் மூத்த சகோதரி தனது காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்தபோது கரீனா பார்த்து விட்டார். தங்களைப் பற்றி பெற்றோரிடம் கூறிவிடுவார் என நினைத்து 13 வயது சகோதரி தனது காதலனுடன் சேர்ந்து 9 வயது சகோதரியைக் கொலைச் எய்து உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் மாமியாரும் அவர்களுக்கு உதவி உள்ளார். சிறுமியை கொன்றுவிட்டு உடலை பெட்டியில் போட்டுள்ளனர். மூன்று நாட்கள் வீட்டில் வைத்து இருந்ளலனர். இறந்தவரை அடையாளம் தெரியாத வகையில் குழந்தையின் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது. பின்னர், குழந்தையின் கால்கள் மற்றும் கைகள் துண்டிக்கபட்டு உள்ளன.
வீட்டிற்கு வந்து பார்த்த பெற்றோர் குழந்தையை காணவில்லை. அவர்கள் அருகில் உள்ள ஜந்தாஹா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் என கூறினார்.