Vijay Makkal Iyakkam – உலக பட்டினி தினம் – களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்

சென்னை: Vijay Makkal Iyakkam (விஜய் மக்கள் இயக்கம்) மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் உணவு அளிக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

அவர் சொல்லுக்கிணங்க இந்தத் திட்டம்: “தளபதி” அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல: மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “பட்டினி தினத்தை” முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.

பசியினை போக்கும் விழிப்புணர்வு: இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை சந்திக்கும் விஜய்: முன்னதாக, தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவ, மாணவிகளை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் விஜய் சந்திக்கவிருக்கிறார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

World Hunger Day Vijay Makkal Iyakkam has announced that food will be provided

அரசியல் மூவில் விஜய்: இதற்கிடையே விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆசை துளிர்விட்டிருப்பதாக பலர் கூறிவருகின்றனர். அதற்கேற்றார்போல்தான் அவரது சமீபத்திய நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. உதாரணமாக, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சொன்னது, லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தென் தமிழ்நாட்டில் நடத்த முடிவு செய்திருப்பதை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

தடம் பதிக்கும் தள்பதி விஜய்: இப்போது உலக பட்டினி தினத்தில் பசியாற்றுவது பரவலான கவனத்தை பெறும். இதன் மூலம், விஜய் தனது தடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பொதுவாழ்க்கையில் பதித்துவருகிறார் என்பது உறுதியாகிறது என்றும் சிலர் கூறிவருகின்றனர். விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.