'நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவு' – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி

மும்பை,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.ராகவ் ஆகியோர் மும்பைக்கு சென்றுள்ளனர். அங்கு மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை அவரின் மாதேஸ்ரீ இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது டெல்லி அரசை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சிறப்பு சட்டத்தை எதிர்த்து போராட ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இதன் பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்பவாரை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய சரத்பவார், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க போவதாக தெரிவித்தார். பா.ஜ.க.விற்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று திரள வேண்டியது அவசியம் என்றும் சரத்பவார் குறிப்பிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.