Kerala Chief Minister who ignores those educated in Tamil is requested to give a speech | தமிழில் படித்தவர்களை புறக்கணிக்கும் கேரளா முதல்வர் பேச்சு நடத்த கோரிக்கை

மூணாறு:கேரளாவில் தமிழ்வழி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தகுதி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேசவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கேரளாவில் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், வயநாடு, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் தமிழ் வழி கல்வி பயின்று வருகின்றனர்.

ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வை கேரள அரசு 2012ல் அறிமுகம் செய்தது. நான்கு பிரிவுகளில் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஆனால் கேள்வி தாள்கள் ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் மட்டுமே வழங்கப்படுவதால் தமிழ்வழி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதினாலும் வெற்றி பெற இயலாத சூழல் நிலவுகிறது.

அதனால் மாநில பணியாளர்கள் தேர்வையும் சந்திக்க இயலாமல் ஏராளமானோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு மே 30ல் நடக்கிறது. தேர்வு எழுதினாலும் பயனில்லை என்பதால் தமிழ்வழி கல்வி பயின்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

இப்பிரச்னைக்கு கேரள அரசு தீர்வு காண கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.