எச்சரிக்கை கொடுத்த மறுநாளே இப்படியா.. உலக சுகாதார அமைப்பின் நோய் பட்டியலில் காத்திருந்த அதிர்ச்சி

வாஷிங்டன்: கடந்த சில தினங்களுக்கு முன்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், அடுத்த ஒரு பெருந்தொற்றுக்கு உலகம் தயராக இருக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றை விட ஆபத்தானதாகவும் இருக்கும் எனவும் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் நோய்கள் பற்றி வெளியிட்ட ஒரு அறிக்கை அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் வியாபித்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின.

பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. வைரஸ் பரவலால் பொருளாதார அளவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது.

தற்போது வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து விட்டது. மக்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டனர். அண்மையில் கொரோனா பெருந்தொற்று அவசர நிலையை விலக்கி கொள்வதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. இதனால், உலக மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், அடுத்த ஒரு பெருந்தொற்றுக்கு உலகம் தயராக இருக்க வேண்டும் எனவும் கொரோனா தொற்றை விட ஆபத்தானதாகவும் இருக்கும் எனவும் எச்சரித்து இருந்தார்.

உலக சுகாதார அமைப்பு இவ்வாறு கூறிய பிறகு அதன் இணையதளத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நோய்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய்கள் என தேர்வு செய்யப்பட்டு வெளியான இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்த நோய்களில் எபோலா, சார்ஸ், ஜிகா வைரஸ் ஆகியவை இடம் பெற்று இருந்தன.

இந்த நோய்கள் பற்றி உலக மக்கள் பரவலாக அறிந்து இருந்தாலும் இறுதியாக பட்டியலில் ‘Disease X’ என குறிப்பிடபட்டுள்ளது சற்று அச்சம் ஏற்படுத்துவமாக அமைந்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைபின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- தொடர்ச்சியான பெருந்தொற்றுக்கள் pathogen(நோய்க்கிருமிகள்) மூலம் ஏற்படக்கூடும் எனவும் தற்போது மனிதனுக்கு நோயை ஏற்படுத்துவதாக தெரியவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு புதுவகையான வைரஸ், பாக்டீரியா, அல்லது பூஞ்சை என்பதாக கூட இருக்கலாம். சிகிச்சை முறைகள் எதுவும் அறிந்திடாத ஒன்றாக இருக்கும் என்று சொல்லபப்ட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் இதுபோன்ற பட்டியலை வெளியிட்டது. அதற்கு அடுத்த ஆண்டே கொரோனா 1 உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது கவனிக்க வேண்டியது.

உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கூறிய பட்டியலில், மார்பர்க் வைரஸ், கிரிமீன் – காங்கோ ஹெமோராஜிக் காய்ச்சல், லஸ்சா காய்ச்சல், நிபா மற்றும் ஹெனிபவிரல் நோய்கள் உள்ளிட்டவற்றையும் பட்டியலிட்டப்பட்டுள்ளன.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.