புதுடில்லி:டில்லி எஸ்.ஆர்.எம்., பல்கலை, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.
சமீபத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் லித்தியம் பேட்டரியை கொண்டு, ஈ.கார்ட் பேட்டரி காரை கண்டுபிடித்து சாதித்துள்ளனர்.
இதை நேரில் சென்று பார்வையிட்ட மத்திய அமைச்சர் ஜிஜேந்தர் சிங், அது தொடர்பான மாணவர்களை பாராட்டினார்.
மேலும், இந்த வகை ஈ.கார்ட் பேட்டரி கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துடன் இணைந்து எஸ்.ஆர்.எம்., பல்கலை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., பல்கலை இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன் கூறும்போது, ”இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலை நிதி உதவி வழங்கி, முன்னாள் மாணவர்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய மேலாண்மை திறன் மற்றும் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக அமைகிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement