இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.
கலவர சூழல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பிஷ்ணுபூர், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
முன்னதாக, ஊரடங்கு சட்டம் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலரின் வீடுகள் எரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பிஷ்ணுபூர் மாவட்டம் மொய்ராங்கில் உள்ள சில கிராமங்களில் ஆயுதமேந்திய இளைஞர்கள் புதன்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
மணிப்பூர் மாநிலம் மே 4 முதல் கலவரங்களை சந்தித்து வருகிறது. காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டாலும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் வேண்டுகோள்: மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டவும், சில பகுதி களில் நடைபெறும் வன்முறை சம் பவங்களை கட்டுக்குள் கொண்டு வரவும் கூடுதல் மத்திய பாதுகாப்பு படைகளை மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசிடம் முதல்வர் என்.பிரேன் சிங் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.