பெங்களூரு இன்னும் 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நேற்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ”தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்திருந்தனர். ஆனால் மந்திரிசபை கூட்டத்தில் இலவசத் திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டும் அளித்துவிட்டு, அமல்படுத்திவிட்டது போல் நாடகமாடுகிறார்கள். அத்துடன் காங்கிரஸ் ஆட்சிக்கு […]