நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் எனக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, குடியரசுத் தலைவரின் மதிப்பை குறைப்பது மட்டுமன்றி, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்தது. பொதுநல மனு விளம்பர நோக்கத்திற்காக தொடுக்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.