தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஏனெனில் போலீசார் உதவியின்றி அதிகாரிகள் நேரடியாக களத்தில் குதித்துள்ளனர். இதனால் பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைக்கும் நோக்கில், அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளக்கம்
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக முதலமைச்சர்
சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க சென்றிருக்கிறார். இதுதொடர்பான தகவல்கள் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்
அகில இந்திய பத்திரிகைகளில் கூட ஸ்டாலின் கவனம் பெற்றுள்ளார். தமிழகத்தின் தொழில் முன்னேற்றத்திற்காக தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். இதனை ஜீரணித்து கொள்ள முடியாத பாஜக அரசு, ஸ்டாலின் மீதுள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தி வருகின்றன. இதுபோன்ற சலசலப்பிற்கு திமுக ஒருபோதும் அஞ்சியது கிடையாது.
செந்தில் பாலாஜிக்கு கட்டம்
குறிப்பாக செந்தில் பாலாஜியை குறிவைத்திருப்பதற்கு என்ன காரணமென்றால், இன்னும் 10 நாட்களில் உரிய விளைவுகளை செந்தில் பாலாஜி சந்திப்பார் என்று அண்ணாமலை பகிரங்கமாக சொன்னார். 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிமுக கணிசமான இடங்களை வென்றது. அதன்பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மண்டலத்தில் திமுக அமோக வெற்றி பெற்றது.
அண்ணாமலை யார்?
இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதனால் தான் அவரை தொடர்ந்து கட்டம் கட்டி வருகின்றனர். அண்ணாமலை சொன்ன பிறகு ரெய்டு நடக்கிறது என்றால், அவர் என்ன டிஜிபியா? சிபிஐ இயக்குநரா? அமலாக்கத்துறை இயக்குநரா? யார் அவர்? எனவே திட்டமிட்டு சோதனையை அரங்கேற்றியுள்ளனர். போலீசாருக்கே தகவல் தெரிவிக்கவில்லை.
ஐடி ரெய்டில் பரபரப்பு
இதனால் தான் திமுகவினர் திரண்டு வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அதிகாரிகள் தாக்கப்பட்டதாக பொய்யான தகவலை பரப்புகின்றனர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு திமுகவினர் ஒருவர் கூட அங்கிருக்காமல் பார்த்து கொள்ள அறிவுறுத்தினேன். அதன்பேரில் திமுகவினர் வெளியேறிவிட்டதாக கூறினார்.
2 ஆயிரம் நோட்டுகள் – பின்னணி
மேலும் பேசுகையில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்னர், எதிர்க்கட்சிகள் மிக வேகமாக ஒன்றிணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை சிதைக்கக் கூடிய வகையில் இதுபோன்ற ரெய்டுகள் நடத்தப்படுகின்றனர். ஒரு கவரில் ஐந்து 2 ஆயிரம் நோட்டுகளை வைத்து அதில் தாமரை சின்னத்தை அச்சிட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் 2 ஆயிரம் நோட்டுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. எனவே கர்நாடகாவின் தோல்வி கூட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்ய ஒரு காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.