இசையை கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிசான் மேக்னைட் கெஸா சிறப்பு எடிசன் மாடலின் விலை XL வேரியண்ட்டை விட ரூ.35,000 வரை அதிகரிக்கப்பட்டு ₹ 7.39 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானிய மொழியில் கெசா என்றால் “மேடைக்கு வெளியே இசைக்கருவி மற்றும் ஒலி எழுப்புதல்” என்று பொருளாகும். மேலும் குறிப்பிட்ட பதிப்பு அதன் பெயருக்கு ஏற்றதாக உள்ளது. ஏனெனில் பெரும்பாலான மேம்படுத்தல்கள் இன்ஃபோடெயின்மென்ட் மூஙம் உள்ளன.
Nissan Magnite Geza Edition
நிசான் மேக்னைட் கெஸா மாடலில் கூடுதலாக உள்ள வசதிகள் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஜேபிஎல் ஒலி அமைப்பு, பாதை வழிகாட்டுதல்களுடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, ஆப் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் ஆம்பியன்ட் விளக்குகள், சுறா துடுப்பு வகையிலான ஆண்டெனா மற்றும் பழுப்பு நிற அப்ஹோல்ஸ்ட்ரி பெற்றுள்ளது.
என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது. புதிய ஆர்டிஇ விதிமுறைக்கு ஏற்ற 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
கெஸா மாடல் சாதாரன 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.