உத்தரகாண்ட் மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லையில் கிராமங்களை உருவாக்கி தனது குடிமக்களை சீனா குடியேற்றி வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் சீனாவுடன் சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த எல்லையில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய 250 குடியிருப்புகளை கொண்ட கிராமம் ஒன்றை சீனா உருவாக்கி வருவதாகவும், எல்லையை ஒட்டி இதே போன்ற மேலும் 400 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீன எல்லையில் நிலவும் சூழலை கண்காணித்து வருவதாகவும் இந்திய ராணுவம் கூறியுள்ளது. இதற்கு பதிலடியாக உத்தரகாண்ட் எல்லையில் சாலை மற்றும் சுரங்கப்பாதைகளை இந்தியாவும் கட்டமைத்து வருகிறது.