இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவின் முன்னனி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அதன் புதிய Jio Plus Postpaid திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் Jio Postpaid வாடிக்கையாளர்களை அதிகரிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Postpaid family plans வரிசையில் ஏர்டெல் மற்றும் Vi நிறுவனங்களை விட ஜியோ நிறுவனமே வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் வழங்குகிறது. இதனுடன் கூடுதலாக அன்லிமிடெட் 5G வசதியும் கிடைக்கிறது.
BSNL 4G சேவை விரைவில் அறிமுகம்! டெலிகாம் சந்தையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்?
399 Postpaid Plan
இந்த திட்டம் மூலமாக பயனர்களுக்கு மொத்தமாக 75GB டேட்டா கிடைக்கிறது. நமக்கு கூடுதல் டேட்டா கிடைக்கவேண்டும் என்றால் 1GB டேட்டா/ 10 ரூ என்ற அளவில் பெறலாம். இதில் 3 Addon Sim card வசதி உள்ளது. ஒவ்வொரு கூடுதல் Sim Card 5GB மாத டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100SMS ஒரு நாளைக்கு போன்ற வசதிகளுடன் கிடைக்கும்.
இந்த திட்டங்களுடன் Jio TV, Jio Cinema, Jio Security, Jio Cloud வசதிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு கூடுதல் Sim Card பயன்படுத்த 99 ரூபாய் மாத கட்டணம் செலுத்தவேண்டும். இதற்கும் அன்லிமிடெட் 5G வசதி கிடைக்கும். மேலும் இந்த மூன்று புதிய Sim Card சேர்க்கவேண்டும் என்றால் 399+ (3×99) = 696 + Tax கட்டணம் செலுத்தவேண்டும். இதில் முதல் 30 நாட்கள் Trial வசதி உள்ளது.
Airtel 599 Plan: ஒரே போஸ்ட்பெய்டு திட்டம்! குடும்பம் முழுக்க மகிழ்ச்சி!
இந்தியாவில் தற்போது Airtel, Vi, BSNL, Jio ஆகிய நிறுவனங்கள் டெலிகாம் நிறுவனங்களாக இயங்கிவருகின்றன. இவற்றில் அனைத்து நிறுவனங்களும் Family Postpaid வழங்கினாலும் கூடுதலாக 5G சேவையை Airtel மற்றும் Jio மட்டுமே வழங்குகின்றன. இதில் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே பயனர்களுக்கு வழங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்