ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களுக்கான மீட்பு காப்சூலை, மீட்பு குழுக்களின் பயிற்சிக்காக இந்திய கடற்படையிடம், இஸ்ரோ ஒப்படைத்தது.
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது.
கொச்சியில் உள்ள கடற்படை பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி முதல் வீரர்கள் பயணிக்கும் காப்சூலை மீட்பது குறித்த பயிற்சியை இஸ்ரோ தொடங்கியது. இந்நிலையில், மீட்பு பயிற்சியில் இஸ்ரோவுடன் இணைந்து இந்திய கடற்படையும் செயலாற்றவுள்ளது.
இதுகுறித்த பயிற்சி திட்ட ஆவணத்தை கடந்த 24-ம் தேதி, கடற்படை மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் இணைந்து வெளியிட்டனர். இப்பயிற்சியில் கடற்படையினர், மார்கோஸ், மருத்துவ நிபுணர்கள் என பல்வேறு குழுவினர் பணியாற்றவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
((