இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Meta நிறுவனம் விரைவில் Whatsapp செயலியில் பயனர்கள் பெயர்களை ஒவ்வொரு கணக்கிலும் தனியாக சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக மொபைல் எண் பயன்படுத்துவதற்கு பதிலாக நமக்கு பிடித்தமான தனிப்பட்ட பெயர்களை பயன்படுத்தலாம்.
இது தற்போது ஆக்கத்தில் இருப்பதால் விரைவில் இதுபோன்ற வசதியை நாம் Whatsapp செயலியில் எதிர்பார்க்கலாம். இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதும் நாம் Whatsapp Settings பக்கத்திற்கு சென்று அதில் Profile Section மூலம் பெயர்களை மாற்றலாம்.
Netflix பயனர்கள் இனி பாஸ்வேர்ட் பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்! அதிர்ச்சி திட்டம்..
இதில் நமக்கு பிடித்தமான பெயரை தேர்வு செய்ததும் நமக்கு மொபைல் எண் தேவைப்படாது. இந்த பெயரை வைத்துக்கொண்டே நாம் அடுத்தவர்களிடம் Chat செய்யலாம். குறிப்பாக இந்த பெயர் மூலம் Chat செய்வது எப்படி வேலை செய்யும் என்பது தெரியவில்லை என்றாலும் நாம் Chat செய்யும் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும். பயனர்களின் பாதுகாப்பை Whatsapp நிறுவனம் இதில் உறுதி செய்கிறது.
இதேபோல Instagram செயலியில் குழுவிற்கு புதிய UI வெளியிடபட்டுள்ளது. இது தற்போது Beta பயனர்களுக்கு கிடைக்கிறது. அதேநேரம் மொபைல் எண்களை விட பயனர்களின் பெயர்களை பயன்படுத்துவது சுலபமாக இருக்கும். மேலும் மொபைல் எண் மாற்றினாலும் இனி கவலைப்படத்தேவையில்லை.
BGMI விளையாட்டை இன்னும் 3 மாதங்களில் மீண்டும் விளையாடலாம்!
தற்போது உலகம் முழுவதும் Whatsapp பயன்படுத்தவேண்டும் என்றால் மொபைல் எண் இணைக்கவேண்டும். மேலும் நமது Contact List மூலமாகவே நம்மால் Chat செய்யமுடியும். இந்த Username வசதி எப்போது Whatsapp’இல் வெளியாகும் என்பது தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்