திருப்பதி ஏழு மலையான் கோவிலில் 36 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதிஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியாவில் கோவிலிலும் இல்லாத அளவுக்கு ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை குவிந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முன்பு வார இறுதி நாட்களில் அதிகளவு கூட்டம் காணப்பட்ட நிலையில் தற்போது வார நாட்களிலேயும் அதிகரித்து வருகிறது.
த்ரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் நடிகை காவியா அறிவுமணி… சேலையில் அசத்தல் போஸ்!பக்தர்களின் கூட்டம்இந்த மாதத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. வார இறுதி நாட்களை போல வார நாட்களிலும் 4 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
IT Raid: கையில் கொண்டு செல்லப்பட்ட பை… பெண் அதிகாரியை சுற்று வளைத்து சோதனை செய்த திமுகவினர்!அதிகரிக்க காரணம்கோடை விடுமுறை நிறைவடைய உள்ளதே திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருப்பதி மலையில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று பகல் பொழுதெல்லாம் திருப்பதி மலையில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஆனாலும் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கால்கடுக்க காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சட்டென வானிலை மாறியது.
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மாநகராட்சி பணியாளர்களா? அப்பட்டமான அதிகார அத்துமீறல்… அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!சூறாவளி காற்று மழை
மாலை 5 மணி அளவில் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தன. கீழ் திருப்பதியில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
பக்தர்கள் கோரிக்கைபலத்த மழையின் காரணமாக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கடும் குளிரிலும் நடுங்கியபடி நின்று சாமி தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடியும் வரை வார நாட்களிலும் பக்தர்க்ள விரைவாக சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் வார இறுதி நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமுல் வந்தாலும் ஆவின் அதனை சமாளிக்கும்… அமைச்சர் மனோ தங்கராஜ் பளீச்!உண்டியல் காணிக்கைஇதனிடையே திருப்பதியில் நேற்று 74,583 பேர் தரிசனம் செய்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் 3.57 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40,343 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aishwarya Rajinikanth: மகன்களுடன் கெத்தாய் கிரிக்கெட் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!