வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராய்ப்பூர்: தன்னுடைய ஒரு லட்சம் மதிப்புள்ள செல்போன் அணையில் விழுந்ததை எடுப்பதற்காக அணை நீரை வெளியேற்றினார் அதிகாரி ஒருவர்
சட்டீஸ்கர் மாநிலத்தில் உணவு பாதுகாப்புத்துறையில் கோயாலிபெடா பகுதியில் பணியாற்றி வருபவர் ராஜேஸ் விஷ்வாஸ். இவர் விடுமுறை தினத்தை அனுபவிப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கெர்கட்டா பரல்கோட்அணைக்கு சென்று இருந்தார். அப்போது தன்னுடைய 96 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் செல்போனை 15 அடி ஆழம் உள்ள அணை நீரில் தவற விட்டார்.
அதிர்ச்சி அடைந்த ராஜேஸ் நீர்பாசனத்துறையை அணுகினார். போனை மீட்பது குறித்து அந்த துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். முடிவில் அணை நீரை வெளியேற்றப்பட்டு போனை மீட்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 30 குதிரைத்திறன் கொண்ட பம்பு பயன்படுத்தப்பட்டது.
ஒரு நாளைக்கு இருபத்திஒன்று லட்சம் லிட்டர் அளவு வீதம் மூன்று நாளில் சுமார் நாற்பத்தி ஒன்று கனமீட்டர் அளவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீரின் மூலம் சுமார் ஆயிரத்து ஐநூறு ஏக்கர் நீர் பயன்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ராஜேஸ் வெளியேற்றப்பட்ட நீர் பாசனத்திற்கு தகுதி அற்ற கழிவு நீர் ஆகும். இதற்கான செலவு ஏழாயிரம் ரூபாய் முதல் எட்டு ஆயிரம் வரை ஆனது. எனது செயலால் எந்த விவசாயியும் பாதிக்கப்பட வில்லை என வாதிட்டுள்ளார்.
மேலும் அது தனது தனிப்பட்ட போன் என்பதால் அதில் முக்கியமான தொடர்புகள் இருந்ததால் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார். இருப்பினும் ஒரு வழியாக மீட்க பட்ட போன் வேலை செய்யும் நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நீர்வளத்துறை துணை அதிகாரியான ராம்லால் திவார் கூறுகையில் ஐந்து அடி ஆழம் வரை நீரை வெளியேற்ற வாய்யமொழி அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பத்து அடிக்கும் மேல் நீர்மட்டம் குறைந்துள்ளது. பாசனத்தில் ஏற்படும் பாதிப்புகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்து இழந்த நீரை ஈடுகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றனர் என கூறினார்.
இந்தியா முழுவதும் கோடை வெயில் தகித்து வரும் வேளையில் அதிகாரி ஒருவரின் நீர் வெளியேற்றிய சம்பவம் வைரலானது. இதனையடுத்து குறிப்பிட்ட அதிகாரி நிர்வாக ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement