வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : புதுடில்லியில், மேலும் 80 சிறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, சிறைத் துறை இயக்குனர் சஞ்சய் பெனிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைநகர் புதுடில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா தில்லு தாஜ்புரியாவை, கடந்த 2ம் தேதி, மற்றொரு தாதா கும்பலைச் சேர்ந்த ரவுடிகள் குத்திக் கொலை செய்தனர்.சினிமா பாணியில் சிறைக்குள் நடந்த இந்த கொலை சம்பவம், புதுடில்லியை உலுக்கியது.இதையடுத்து, சிறை நிர்வாகத்தில், சிறைத் துறை இயக்குனர் சஞ்சய் பெனிவால் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
இன்று ஐந்து துணை கண்காணிப்பாளர்கள், ஒன்பது உதவி கண்காணிப்பாளர்கள், எட்டு தலைமை வார்டன்கள் உள்ளிட்ட மேலும் 80 சிறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, சஞ்சய் பெனிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement